திருச்சி அருகே நூறு நாள் வேலைத் திட்ட பணியாளர்கள் சாலைமறியல் போராட்டம்

நூறு நாள் வேலைத் திட்டத்தில் பயனாளிகள் கல்லணை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2022-01-06 17:01 GMT

திருச்சி அருகே நூறு நாள் வேலை திட்ட பணியாளர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

நூறு நாள் வேலை திட்டத்தில் வேலைக்கு வரும் பயணிகள் முன்கூட்டியே தினமும் 6 மணிக்கு வந்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்றும் அதன்பிறகு 9 மணிக்கு முறைப்படி வேலைக்கு வரவேண்டும் என புதிய நிபந்தனைகளை விதித்து வருகின்றனர்.

இதனால்100 நாள் வேலைத்திட்டத்திற்கு வரும் பெண்கள் வீட்டில் சமையல் உள்ளிட்ட வேலைகளை செய்ய முடியவில்லை என்றும் அதனால் வழக்கம்போல் 9 மணிக்கு 100 நாள் வேலை பணி தொடங்க வேண்டும் என கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த புதிய நிபந்தனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உத்தமர்சீலி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திருவானைக்கோவில் கல்லணை சாலையில் சரக்கை பகுதியில் இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு அந்தநல்லூர் ஒன்றியம் ஓவர்சியர் சபிதா மற்றும் நம்பர் 1 டோல்கேட் போலீசார் பொதுமக்களிடம் வழக்கம் போல் 9 மணிக்கே பணிக்கு வந்தால் போதும் என சமரசம் பேசியதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது,

இதனால் திருவானைக்கோவில் கல்லணை சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News