கிளியூரில் மனிதநேயம், நேசம் சார்பில் கபசுர குடிநீர் வழங்கல்

திருவெறும்பூர் அருகே உள்ள கிளியூர் ஊராட்சியில் மனிதநேயம் அறக்கட்டளை மற்றும் நேசம் என்டர்பிரைசஸ் சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.;

Update: 2021-05-13 16:45 GMT

திருவெறும்பூர் பகுதியில் கொரொனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு வழி தெரியாமல் அரசு அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருவெறும்பூர் அருகே உள்ள கிளியூர் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் மற்றும் மாதாகோவில் தெரு பகுதியில் மனித நேயம் அறக்கட்டளை மற்றும் நேசம் எண்டர்பிரைசஸ் சார்பில் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இதில் தொண்டு நிறுவனங்களை சேர்ந்த பெரியதுரை, பாபு வாரிப் சுரேஷ் மற்றும் கிளியூர் ஊராட்சி மன்ற தலைவர் சேகர் பத்தாளப்பேட்டையை சேர்ந்த முருகேசன் மற்றும் சங்கிலி முத்து ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News