நவல்பட்டு ஊராட்சி தலைவர் மீது வார்டு உறுப்பினர் காவல் நிலையத்தில் புகார்
நவல்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் மீது ஊராட்சி வார்டு உறுப்பினர் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.;
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது நவல்பட்டு ஊராட்சி. இந்த ஊராட்சியில் ஜேம்ஸ் என்பவர் தலைவராக உள்ளார். இந்த நிலையில் அந்த ஊராட்சியில் அய்யனார் கோவில் பகுதி மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகம் பின்புறம் இருந்த சரலை செம்மண்ணை பல நாட்களாக ஜே.சி.பி. மூலம் கடத்தப்படுகிறது என்றும், இது நவல்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் இயந்திரத்தின் மூலமாக கடத்தப்பட்டுள்ளது என்றும், அந்த மண்ணை அண்ணாநகர் 6-வது வார்டு குடித்தெரு குறுக்குரோடு போடுவதற்கு பயன்படுத்தி உள்ளார்கள் என்றும் பஞ்சாயத்து வேலைக்கும் இந்த மண்ணை பயன்படுத்துவதாகவும் எனவே இதனை நிறுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நவல்பட்டு 15-வது வார்டு உறுப்பினர் மின்னல் கொடி நவல்பட்டு காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ள சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.