திருச்சியில் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த எம்.ஜி.ஆர். சிலை
திருச்சி திருவெறும்பூரில் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்து பேசினார்.;
எடப்பாடி பழனிசாமி திறந்த எம்.ஜி.ஆர். சிலை.
திருச்சி திருவெறும்பூர் அருகே பெல் வளாகத்தில் எம்.ஜி.ஆர் .சிலையை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
திருச்சி தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் அருகே பெல் கணேசா பகுதியில் அ.தி.மு.க. நிறுவனர் மறைந்த முதல்வர் எம். ஜி. ஆர். சிலை இருந்தது.அந்த சிலை பாலம் கட்டும் பணிக்காக அதன் அருகில் வேறு இடத்தில் மாற்றி வைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. விழாவிற்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் தலைமை தாங்கினார். பெல் அண்ணா தொழிற்சங்க பொதுச் செயலாளர் கார்த்திக் வரவேற்று பேசினார்.
இந்த விழாவில் முன்னாள் முதல்வரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு எம். ஜி. ஆ.ர் சிலையை திறந்து வைத்து பேசினார்.
இந்த விழாவில் முன்னாள் அமைச்சர்கள் முனுசாமி, வேலுமணி, தங்கமணி, என். ஆ.ர் சிவபதி மற்றும் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் டி. ரத்தினவேல், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பரஞ்சோதி, முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன் உட்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். விமான நிலையத்திலிருந்து திருவெறும்பூர் செல்லும் வரை அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.