நாளை மறுநாள் எம்,ஜி,ஆர், நினைவு நாள்: தொண்டர்களுக்கு வேண்டுகோள்

நாளை மறுநாள் எம்,ஜி,ஆர், நினைவு நாளையொட்டி தொண்டர்களுக்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.;

Update: 2021-12-22 13:00 GMT

எம் ஜி ஆர்.

அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல் அமைச்சருமான எம்.ஜி.ஆரின் நினைவு நாள் டிசம்பர் 24 ஆகும்.

இது தொடர்பாக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் எம்.பி. ப.குமார் வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கழக நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் 34வது ஆண்டு நினைவு நாளையொட்டி திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழங்கள் சார்பில் அந்தந்த பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கும் சிலை இல்லாத இடங்களில் அவரது உருவ படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செய்து ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவேண்டும்.

இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட கழக நிர்வாகிகள், எம்.ஜி.ஆர் மன்றம், ஜெ.பேரவை,எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி,  மருத்துவ அணி, அமைப்புசாரா தொழிலாளர் அணி, இலக்கிய அணி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில் நுட்ப பிரிவு, வர்த்தக அணி, கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அனைத்து அணி நிர்வாகிகள், செயல் வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News