திருச்சி கூத்தைப்பார் ஜல்லிக்கட்டு போட்டியில் 400 காளைகள் பங்கேற்பு

திருச்சி கூத்தைப்பார் ஜல்லிக்கட்டு போட்டியில் 400 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.;

Update: 2022-01-21 14:26 GMT
திருச்சி கூத்தைப்பாரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அடங்க மறுக்கும் காளை, அடக்க துடிக்கும் இளைஞர்.

பொங்கல் பண்டிகையையொட்டி திருச்சி திருவெறும்பூர் கூத்தைப்பார் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. திருவரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். முதலில் வாடிவாசல் வழியாக கோவில் காளைகளும், அதை தொடர்ந்து உள்ளூர் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், மதுரை, புதுக்கோட்டை, அரியலூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஜல்லிக்கட்டு காளைகள் கொண்டுவரப்பட்டு வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது.


இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 29 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதில் 3-பேர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த ஜல்லிக்கட்டில் மொத்தம் 400 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர்.

Tags:    

Similar News