அரியமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் இரும்பு ராடுகள் திருடிய இருவர் கைது
அரியமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் இரும்பு ராடுகள், கம்பிகளை திருடிய இருவர் கைது செய்யப்பட்டனர்.;
திருச்சி அரியமங்கலம் தொழிற்பேட்டை எதிரே, மின்சார வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் அடிக்கடி இரும்பு கம்பிகள் காணாமல் போய் வந்தது. இதன் காரணமாக மின் ஊழியர் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மின்கம்பி திருட்டில் ஈடுபட்ட ஒரு ஆண், ஒரு பெண்ணை கையும் களவுமாக பிடித்து அரியமங்கலம் போலீசாரிடம் மின்வாரிய ஊழியர்கள் ஒப்படைத்தனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் காந்தி மார்க்கெட் சூரஞ்சேரி பகுதியை சேர்ந்த மாரியம்மாள் (வயது 40), தாராநல்லுார் காமராஜர் நகரை சேர்ந்த செல்வம் (வயது 33) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் இருந்து, திருடப்பட்ட 19 கிலோ இரும்பு ராடுகளும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து இருவர் மீதும் வழக்கு பதிந்த அரியமங்கலம் போலீசார் இ, ருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.