திருவெறும்பூரில் சட்ட விரோதமாக மது விற்ற 2 பேர் கைது

திருவெறும்பூர் பகுதியில் கொரொனா ஊரடங்கை பயன்படுத்தி கள்ள சந்தையில் கூடுதல் விலைக்கு அரசு மதுபான பாட்டில்களை விற்ற இரண்டு பேரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்

Update: 2021-05-12 04:45 GMT

தமிழக அரசு கொரொனா இரண்டாவது அலை தீவிரம் காரணமாக 10 ம் தேதி முதல் வரும் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பித்து உள்ளது. இந்த காலகட்டத்தில் அரசு மதுபானக் கடைகள் மூடப்படுப்பட்டுள்ளது இதனை பயன்படுத்தி முன்கூட்டியே அரசு மதுபான பாட்டில்களை கடைகளில் வாங்கி கள்ளசந்தையில் கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர்.

அது அது போல் திருவெறும்பூர் பகுதிகளும் விற்கப்படுவதாக திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் திருவெறும்பூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் சேர்ந்த சிங்கமுத்து மகன் செங்கதிர் (21)திருவெரும்பூர் காந்தி நகர் 7வது தெருவை சேர்ந்த வெங்கட்ராமன் (55) ஆகிய இருவரும் கள்ளச்சந்தையில் அரசு மதுபான பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்ற போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டனர்.

மேலும் அவர்களிடமிருந்து 25 குவாட்டர் மதுபான பாட்டில்களை திருவெறும்பூர் போலீசார் பறிமுதல் செய்ததோடு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News