திருச்சியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவர் குண்டர் சட்டத்தில் கைது

திருச்சியில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.;

Update: 2021-11-21 04:47 GMT

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச்சம்பவங்கள், சட்டத்திற்கு புறம்பாக ரேசன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் ஏதும் நடைபெறாதவண்ணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்து செய்யவும், வாகன தணிக்கை செய்ய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கி உள்ளார். 

இந்நிலையில் கடந்த 6.11.21-ந்தேதி திருச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் தலைமையில் தணிக்கை செய்தபோது காட்டூர், திருநகர் பகுதியில் வசிக்கும் இஸ்மாயில் (வயது 40) என்பவர் சுமார் 4,300 கிலோ பொது விநியோகத்திட்ட ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்து கடந்த 6.11.21-ந்தேதி கைது செய்து  சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் இவர் மீது ஏற்கனவே 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நிலுவையில் உள்ளதால், அவரது குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு திருச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன்,  இஸ்மாயிலை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க ஆணையிட்டார்.

அதன் பேரில் கடந்த 06.11.21-ம்தேதி முதல் திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் இஸ்மாயிடம் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்படி கைது செய்யப்பட்ட ஆணையினை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளர் சார்வு செய்தார்.

Tags:    

Similar News