திருச்சி அருகே எச்.எம்.கே.பி. மாநில செயலாளரின் வீடு புகுந்து தாக்குதல்

திருச்சி அருகே எச்.எம்.கே.பி. மாநில செயலாளரின் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-11-04 12:40 GMT
தாக்குதலில் கீழே தள்ளப்பட்ட போட்டார் சைக்கிள்.

திருச்சியில் ஹெச். எம். கே. பி. அமைப்பின் மாநில செயலாளர் மோட்டார் சைக்கிளை சூறையாடிய நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.


திருச்சி பொன்மலை திருநகர் ஏழாவது கிராசை சேர்ந்தவர் ராபர்ட் கிறிஸ்டி. சமூக சேவகவரான இவர் இந்திய  தொழிலாளர் விவசாயிகள் கூட்டமைப்பின் (எச்.எம்.கே.பி.) மாநில செயலாளராகவும் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாரிடம் ஒரு மனு அளித்தார்.

அதில் சில போலீஸ் நிலையங்களில் போலீசார் அநிதியாக நடந்து கொள்வதால் அவர்களது செயல்பாடுகளை கண்காணிக்க அவர்களது சீருடையில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த வேண்டும் என கூறியிருந்தார். இந்த நிலையில் அவரது வீட்டுக்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் அவரது மகள் கர்ப்பிணி யான ஸ்டெபி என்பவரது கண் முன்னே தகாத வார்த்தைகளால் திட்டி தகராறு செய்துவிட்டு சென்றுள்ளனர்.

இது பற்றி திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.இந்த புகார் பற்றி போலீசார் பெயரளவிற்கு விசாரணை நடத்தினாலும் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இது பற்றி மீண்டும் ராபர்ட் கிறிஸ்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்த போது மீண்டும் அந்த நபர்கள் வந்து வீடு புகுந்து ரகலையில் ஈடுபட்டுள்ளனர். இதனை விசாரணை அதிகாரிகளான போலீசார் வீடியோ எடுத்துள்ளனர். ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இது பற்றி மீண்டும் புகார் செய்தார்.

இதற்கிடையில் இன்று காலை இரண்டு நபர்கள் ராபர்ட் கிறிஸ்டியின் வீட்டுக்கு வந்து அவரது வீட்டின் முன் நிறுத்தப்பட்டு இருந்த அவரது மோட்டார் சைக்கிளை அடித்து கீழே தள்ளி சூறையாடி விட்டு சென்று இருக்கிறார்கள். இந்த தொடர் சம்பவங்கள் தொடர்பாக ராபர்ட் கிறிஸ்டி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் செய்து உள்ளார். அதில் போலீசாரின் நடவடிக்கை தொடர்பாக புகார் கூறியதால் தன்னை மர்ம நபர்கள் தாக்குவதற்கு முயற்சிப்பதாகவும் இது பற்றி விசாரணை நடத்தும் படியும் கூறியுள்ளார். இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் வழக்கு பதிவு செய்து சி. எஸ். ஆர். நகலும் வழங்கி உள்ளனர்.

Tags:    

Similar News