திருச்சியில் அரசு பள்ளி மாணவிகளுக்கு புதிய வழித்தடத்தில் இலவச பஸ் வசதி

திருச்சியில் அரசு பள்ளி மாணவிகளுக்கு புதிய வழித்தடத்தில் இலவச பஸ் வசதியை இனிகோ இருதய ராஜ் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

Update: 2021-09-22 17:30 GMT

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இ.பி. ரோட்டில் இயங்கும்  அரசு மகளிர் இஸ்லாமிக் மேல்நிலைப் பள்ளியில் ஏராளமான மாணவிகள் படித்து வருகிறார்கள். தொலை தூரத்திலிருந்து பள்ளிக்கு வரும் மாணவிகளுக்கு கல்வி கற்க வருவதற்காக இலவச பேருந்து வசதியை ஏற்படுத்தித்தர பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் கோரிக்கை வைத்தனர்

அதை ஏற்று பள்ளியிலிருந்து திருவெறும்பூர் வரை மாணவிகள் சென்று வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் பேசி அதற்கான அனுமதியை பெற்று அந்த பள்ளி முன்பிருந்து இலவச பேருந்து வசதியை திருச்சி சட்டமன்ற தொகுதி தி.மு.க. உறுப்பினர் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். மேலும் மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் விலையில்லா புத்தகப்பைகளை வழங்கி, அரசு செய்யும் உதவிகளை நல்லமுறையில் பயன்படுத்தி படிக்க அறிவுறுத்தினார்.

இதில் மலைக்கோட்டை பகுதி செயலாளர் மதிவாணன், வட்ட செயலாளர்கள் சிவக்குமார், பாறையடி சங்கர், சண்முகம் மற்றும் ஜெய், தர்கா முபாரக், அப்துல்சமது, காஜாமைதீன், முகமது இக்பால், பஷீர், ரகுமான் சேட் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரும், பள்ளித் தலைமை ஆசிரியரும் நன்றி கூறினார்கள்.

Tags:    

Similar News