திருச்சி வாழவந்தான்கோட்டையில் இலவச பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் முகாம்

திருச்சி வாழவந்தான்கோட்டைசிட்கோவில் கொரோனா இலவச பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.;

Update: 2022-07-19 10:03 GMT
திருச்சி அருகே வாழவந்தான்கோட்டை சிட்கோ தொழிற்பேட்டையில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது.

திருச்சி மாவட்டம் துவாக்குடியை அடுத்த வாழவந்தான் கோட்டை சிட்கோ தொழிற்பேட்டையில் தமிழக அரசின் அறிவுறுத்தல்படி கொரோனா பரவலை தடுப்பதற்காக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. வாழவந்தான்கோட்டை தொழிற்பேட்டை உற்பத்தியாளர் கூட்டமைப்பு (விமான்) சார்பில் நடைபெற்ற இந்தமுகாமில்  தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சுமார் 200 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த முகாமை விமான் தலைவர் ராம்பிரகாஷ், சிறு குறு தொழில்கள் சங்க தலைவர்  ராஜப்பா ஆகியோர் துவக்கி வைத்தனர்.

Tags:    

Similar News