திருச்சி அருகே அரசங்குடியில் விவசாயிகளுக்கு வயல் வெளி பள்ளி பயிற்சி

திருச்சி அருகே அரசங்குடியில் விவசாயிகளுக்கு நிலவள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வயல் வெளி பள்ளி பயிற்சி நடைபெற்றது.

Update: 2021-10-11 05:15 GMT

திருச்சி அருகே அரசங்குடியில் விவசாயிகளுக்கு வயல் வெளி பள்ளி பயிற்சி அளிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள அரசங்குடியில் நீர்வள, நிலவள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான வயல் வெளி பள்ளி பயிற்சி திட்டம்  6 கட்டமாக செயல் படுத்தப்பட உள்ளது.

இதன் முதற்கட்டமாக விவசாயிகளுக்கு நிலத்தில் மண்பரிசோதனை செய்வது, ரகங்கள் தேர்வு, நல் விதைத்தேர்வு மற்றும் விதை நேர்த்தி செய்வது போன்ற தொழில் நுட்பங்கள் குறித்து செயல்விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது.பயிற்சிக்கு வேளாண்மை கூடுதல் இயக்குநர் (நீர்வள நிலவள மேம்பாட்டு திட்டம்), சென்னை வளர்மதி மற்றும் திருச்சி வேளாண்மை இணை இயக்குநர் முருகேசன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள் .

திருச்சி வேளாண்மை துணை இயக்குநர் (மாநில திட்டம்) லட்சுமணசாமி வேளாண்மை துறையில் செயல் படுத்தப்படும் மாநில திட்டங்கள் குறித்து கூறினார். திருச்சி வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) மல்லிகா வேளாண்மை துறையில் செயல் படுத்தப்படும் மத்திய திட்டங்கள் குறித்து எடுத்து கூறினார்.

நல்விதைகள் தேர்வு செய்யும் முறை குறித்து திருவெறும்பூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்தர் பிரேம குமாரி விவசாயிகளுக்கு விரிவாக செயல் விளக்கத்துடன் எடுத்து கூறினார்.

மண்பரிசோதனை செய்வதால் விவசாயிகளுக்கு உண்டாகும் நன்மைகள் குறித்து திருச்சி மண்பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் புவனேஸ்வரி விவசாயிகளுக்கு விரிவாக செயல் விளக்கத்துடன் எடுத்து கூறினார்.

உயிரியியல் கட்டுப்பாட்டு காரணிகளை கொண்டு விதை நேர்த்தி செய்யும் தொழில் நுட்பங்கள் குறித்து திருச்சி உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வக வேளாண்மை அலுவலர் சத்யபிரியா விவசாயிகளுக்கு விரிவாக செயல் விளக்கத்துடன் எடுத்து கூறினார்.

இந்த வயல் வெளி பயிற்சியில் அரசங்குடி பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.பயிற்சிக்கான ஏற்பாடுகளை திருவெறும்பூர் வட்டார உதவி வேளாண்மை அலுவலர்கள் செய்திருந்தனர்.முடிவில், திருவெறும்பூர் வட்டார வேளாண்மை அலுவலர் மோகனா நன்றி கூறினார்.

Tags:    

Similar News