‘சிலிண்டர் விலை குறைப்பு மோடியின் நாடகம்’- அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு
‘சிலிண்டர் விலை குறைப்பு மோடியின் நாடகம்’- என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்.
தேர்தலை பயன்படுத்தி தாய்மார்களை ஏமாற்றுவதற்காக சிலிண்டருக்கு 100 ரூபாய் குறைப்பதாக கபட நாடக மாடி வரும் மோடி அரசாங்கத்தை விரட்டி அடிப்போம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமாெழி பேசினார்.
திருச்சி தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் தொகுதி திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய பகுதியில் தி.மு.க. தலைமையிலான இண்டியா கூட்டணியின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் துரைவைகோவை ஆதரித்து ஒன்றிய கழக செயலாளர் கங்காதரன் தலைமையில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி துரை வைகோவிற்கு தீப்பெட்டி சின்னத்தில் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய பகுதிகள் அசூர், சூரியூர், சின்னசூரியூர், எலந்தப்பட்டி, கும்பக்குடி, தேனீர்பட்டி, பொய்கைகுடி, பழங்கனாங்குடி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பிரச்சாரத்தின்போது அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது:-
நமது தமிழக முதல்வர் அவர்கள் நமது தமிழகத்திற்காக ,எந்த மாநிலங்களும் இல்லாத வகையில் பல்வேறு புதுமையான திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறார். அதில் புதுமைப்பெண் திட்டமாக இருந்தாலும் சரி, கலைஞர் உரிமை திட்டமாக இருந்தாலும் சரி. பெண்கள் அரசு பேருந்து இலவசமாக பயணம் செய்யும் திட்டமாக இருந்தாலும் சரி அனைத்து திட்டங்களையும் சிறப்பாக தமிழக முதல்வர் செயல் படுத்தி வருகிறார். மேலும் இந்த திட்டம் தொடர வேண்டுமென்றால் மத்தியில் நமது முதல்வர் கூறும் இந்தியா கூட்டணியின் ராகுல் ஆட்சி தான் வர வேண்டும்.
முதல்வர் அவர்கள் நமது வேட்பாளர் அழைத்து வெற்றி எவ்வாறு உள்ளது என எங்களிடம் கேட்ட பொழுது நான்கு முதல் ஐந்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெறுவார் என்று நாங்கள் கூறினோம். ,ஆனால் தாய்மார்கள் ஆகிய நீங்கள் வழிநெடுங்கிலும் எங்களுக்கு வழங்கி வரும் ஆதரவை பார்க்கும் பொழுது 7 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் துரை வைகோ வெற்றி பெறுவார் என எங்களுக்கு தெரிகிறது.
மேலும் 10 ஆண்டுகள் மத்தியில் ஆளும் மோடி அரசாங்கம் ஆனது கிராமத்தில் உள்ள தாய்மார்களுக்கு 100 நாள் வேலை என்ற பெயரில் 20 நாள் அல்லது 30 நாள் மட்டுமே வேலை தருகிறது. அவ்வாறு அந்த வேலைக்கான சம்பளமும் வங்கி கணக்கு புத்தகத்தில் ஏறுவதே இல்லை. பத்து வருடமாக அதற்காக ஒதுக்கும் நிதியை மோடி அரசாங்கமானது தமிழக அரசிற்கு சிறிது சிறிதாக நிறுத்திவிட்டனர். ஆனால் மத்தியில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்ற நமது தமிழக முதல்வர் அவர்களின் சகோதரரரான ராகுல் காந்தி பிரதமராக அமரும் பொழுது 100 நாள் வேலை ஆனது 150 நாளாக உயர்த்தப்பட்டு அதற்கான ஊதியம் ரூபாய் 400 ஆக உயர்த்தப்பட்டு மக்களுக்கு வழங்கப்படும் என நமது தமிழக முதல்வர் கூறியுள்ளார். எனவே அதற்கு நாம் அனைவரும் தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து துரை வைகோ அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறது.
மேலும் தற்பொழுது இந்தியாவில் உள்ள விவசாயிகள் மோடி அரசால் ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டதுதான் அதிகம். ஆனால் மத்தியில் ராகுல் காந்தி ஆட்சி அமைத்தால் விவசாயிகளின் கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் கூறியுள்ளார். மோடி அரசாங்கம் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்காக தான் ஆட்சி நடத்தி வருகிறது. அங்குள்ள பெரிய முதலாளிகளுக்கு 16லட்சம் கோடியை கடன் தள்ளுபடி செய்துள்ளது.
எனவே இதற்கு பாடம் புகட்டும் வகையில் மோடி அரசாங்கத்தை அகற்றிட ஒரு அற்புதமான வாய்ப்பாக இந்த தேர்தலை நாம் பயன்படுத்தி வாக்கு எந்திரத்தில் ஐந்தாம் இடத்தில் இருக்கும் துரைவைகோவின் சின்னமான தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து அவரை அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.
வாக்கு சேகரிப்பின் போது ஒன்றிய தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் பொன் செல்லையா ஒன்றிய பெருந்தலைவர் சத்யா கோவிந்தராஜ்,மாவட்ட ஒன்றியக் கழக நிர்வாகிகள் சண்முகம்,ஜெகதீசன், கயல்விழி, மாரிமுத்து,. உதயகுமார், பாலமுருகன், சுதாகர், உள்ளாட்சி அமைப்புகளின்பிரதிநிதிகள் ஒன்றிய கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உடன் இருந்தனர்.