திருச்சி சின்னமாவடி குளத்தில் 2 நாளாக ஆக்கிரமிப்பு வீடு இடித்து அகற்றம்
சின்னமாவடி குளத்தில் கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு வீடு இடித்து அகற்றப்பட்டது.;
திருச்சி திருவெறும்பூர் அருகே கீழக்குறிச்சியில் உள்ள சின்னமாவடிகுளத்தில் இருந்த ஆக்கிரமிப்பை வருவாய்த்துறையினர் காவல்துறை உதவியுடன் 2 நாளாக அகற்றி முடித்துள்ளனர்.
திருச்சி திருவெறும்பூர் அருகே கீழக்குறிச்சியில் உள்ள சின்ன மாவடிகுளத்தில் 19 ஏக்கரில் ஆக்கிரமிப்பு பகுதிகளில் கட்டியிருந்த வீடுகளை வருவாய்த்துறையினர், காவல்துறை உதவியுடன் பொக்லைன் கொண்டு நேற்று முன்தினம் இடித்து அப்புறப்படுத்தியபோது ஜார்ஜ் என்பவர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் நேற்று காலை 8 மணி வரை அவகாசம் கோரியிருந்தார்.
அதன் பேரில் அவருக்கு திருவெறும்பூர் தாசில்தார் செல்வகணேஷ் வீட்டிலுள்ள பொருட்களை அப்புறப்படுத்திக் கொள்ள நேற்று காலை வரை அவகாசம் கொடுத்திருந்தார். இந்நிலையில் ஜார்ஜும் வீட்டில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்திய நிலையில் பொக்லைன் உதவியுடன் நேற்று 2 வது நாளாக ஜார்ஜ் வீட்டை இடித்து ஆக்கிரமிப்பை அகற்றினர்.