திருவெறும்பூரில் பி.எம்.எஸ். சங்கம் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திருவெறும்பூரில் பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவெறும்பூரில் பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மத்திய அரசு பி.எச்.இ.எல், பி.எஸ்.என்.எல், பி.பி.சி.எல். உள்ளிட்ட பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்கக் கூடாது.
பொதுத்துறை மற்றும் அரசாங்க சொத்துக்களை குத்தகைக்கு விடக்கூடாது துப்பாக்கி தொழிற்சாலை. எச்.ஏ.பி.பி, எச்.வி. எப். உள்ளிட்ட பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகளையும் கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றுவதை ரத்து செய்ய வேண்டும்.
ரயில்வே மற்றும் விமானத் துறையை தனியாருக்கு விற்கக்கூடாது, பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல். மறுசீரமைப்பு திட்டத்தை முழுமையாக அமல்படுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.