பாரதிதாசன் பல்கலைக்கழக பணியாளர் சங்கம்-ஆசிரியர் கூட்டமைப்பு போராட்டம்
பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தரை கண்டித்து பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடந்தது.
கடந்த செப்டம்பர் 2021 முதல் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆசிரியர்கள் அலுவலர்கள் மற்றும் தினக்கூலி பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஊதியம் வழங்க பல்கலைக்கழகத்தில் நிதி இல்லை என துணைவேந்தர் செல்வத்திடம் பாரதிதாசன் பல்கலைக்கழக பணியாளர் நல சங்கம் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் பலமுறை தெரிவித்தனர்.
இதனைப் பொருட்படுத்தாமல் துணைவேந்தர் செல்வம் அரசுக் கல்லூரி ( உறுப்புக்கல்லூரி) ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுப்பதை கண்டித்து பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் அறையை பாரதிதாசன் பல்கலைக்கழக பணியாளர் நலச்சங்க செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் முற்றுகையிட்டனர்.
பணியாளர் நல சங்கம் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட சுமார் 300 பேர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.