திருச்சியில் மோசமான சாலையை சீரமைக்க கோரி மாநகராட்சி ஆணையரிடம் மனு
திருச்சி அரியமங்கலத்தில் மோசமான சாலையை சீரமைக்க கோரி மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.
திருச்சி ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் திருச்சி மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமானிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்டம் இருபத்தி ஒன்பதாவது வார்டு அண்ணாநகர் பகுதியில் இருந்து தஞ்சை பிரதான சாலைக்கு செல்லும் பாதை கடந்த 15 நாட்களுக்கு மேலாக பெய்து கொண்டிருக்கும் தொடர் மழையினால் நடக்க முடியாத அளவிற்கு பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து முற்றிலும் விடுபட்டு சாலை மிகவும் சேதமடைந்து இருக்கின்றது.
மிகவும் சேதமடைந்த இந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்ல முடியாமல் மக்கள் தினமும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே இந்த சாலையை போர்க்கால அடிப்படையில் தற்காலிகமாக சீரமைத்து மக்களுடைய பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.