பெல் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஆலோசனை நிகழ்ச்சி
திருச்சி பெல் பகுதியில் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு பாதுகாப்பான பயணம் குறித்த விழிப்புணர்வு ஆலோசனை நிகழ்ச்சி நடைபெற்றது.;
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சி மண்டல பொது மேலாளர் சக்திவேல் அறிவுறுத்தலின்படி கோட்ட மேலாளர் (நகரம்) சுரேஷ்குமார், கிளை மேலாளர் துவாக்குடி எட்வர்ட் கென்னடி, ஓட்டுநர் போதகர், பயணச்சீட்டு பரிசோதகர் மற்றும் அலுவலக பணியாளர்கள் ஆகியோரும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
போக்குவரத்து துறையை சார்ந்த வட்டார போக்குவரத்து அலுவலர் (கிழக்கு) கஜபதி, மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜாமணி ஆகியோருடன் இணைந்து பெல் பேருந்து நிறுத்தத்தில் பள்ளி மாணவ, மாணவியர்கள் பேருந்தில் பாதுகாப்பாக பயணம் செய்யும் விதமாக பள்ளி மாணவ, மாணவியரை ஒருங்கிணைத்து அவர்களிடம் பாதுகாப்பாக பயணம் செய்யும் முறைகளைப் பற்றியும் ஆபத்தாக படிகட்டில் நின்று பயணம் செய்யும் போது ஏற்படும் எதிர்பாராத விளைவுகளை பற்றியும் தெளிவாக விளக்கிக் கூறி விழிப்புணவு ஆலோசனைகளை வழங்கிய தோடு அவர்களை பேருந்தின் உள்ளே ஏற்றி அனுப்பி வைத்தார்கள்.