திருச்சி பொன்மலையில் அங்கன்வாடி மையம்: அமைச்சர் அன்பில் மகேஷ் திறப்பு
திருச்சி பொன்மலையில் ரூ.10 லட்சத்தில் அங்கன்வாடி மையத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது திருவெறும்பூர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 28-வது வார்டு பொன்மலையில் , ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை இன்று காலை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சு.சிவராசு தலைமை தாங்கினார். இதில் மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட உதவி ஆணையர் கமலக்கண்ணன், பொன்மலை பகுதி தி.மு.க. செயலாளர் தர்மராஜ் மற்றும் வட்ட கழக நிர்வாகிகள் அங்கன்வாடி பணியாளர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.