திருச்சி பெல் ஆர்.எஸ்.கே. பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா
திருச்சி பெல் ஆர்எஸ்கே பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாள் விழா மரக்கன்று வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 90 வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை திருச்சி பெல் ஆர்.எஸ்.கே.பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
இதனை தொடர்ந்து பெல் ட்ரயினிங் சென்டர் அருகில் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் மரக்கன்று வழங்கும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தின் பொதுச் செயலாளர் லோகநாதன் தலைமை ஏற்று முதல் மரக்கன்றை வழங்கினார்.
சங்கத்தின் செயலாளர்கள் ஜெயக்கொடி, கார்த்திக், தமிழரசன், பொருளாளர் கைலாஷ்நாத், துணைத் தலைவர்கள் சங்கர் கணேஷ், சசிக்குமார், குணா, வினோத் குமார் துணைச் செயலாளர் விக்னேஷ், மருத்துவகுழு உறுப்பினர் பழனி, பணிக்குழு உறுப்பினர் தீனதயாளன், ஆமோஸ், செயற்குழு உறுப்பினர்கள் வினோத் குமார், காசிம், வடிவேல், சதாசிவம் மற்றும் பெல் ஊழியர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.