பொன்மலையில் டாஸ்மாக் கேசியரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது

திருச்சி மாவட்டம் பொன்மலையில் டாஸ்மாக் கேசியரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-04-23 12:00 GMT

திருச்சி குழுமணியை சேர்ந்த நடராஜன் .இவர் பொன்மலைப்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் கேசியராக பணியாற்றி வருகிறார்.சம்பவத்தன்று பொன்மலைப்பட்டி மலையடிவாரத்தை சேர்ந்த பிரசன்னா என்பவர் நடராஜனிடம் கத்தியை காட்டி பணம் பறித்த சென்றுள்ளார்.

இது குறித்து பொன்மலை காவல் நிலையத்தில் நடராஜன் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பிரசன்னாவை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே 6 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News