திருச்சியில் கெமிக்கல் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து

திருச்சியில் கெமிக்கல் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்தில் 2 பேர் காயமடைந்தனர்.

Update: 2021-09-12 16:15 GMT

பைல் படம்.

காரைக்காலில் இருந்து சேலம் மேட்டூர் பகுதிக்கு பிளாஸ்டிக் பைப்புகள் தயாரிக்கும் கெமிக்கல் ஏற்றிச் சென்ற லாரி இன்று மதியம் திருவெறும்பூர் அருகே உள்ள பெல் ரவுண்டானவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனால் தீ விபத்து ஏற்படாமல் இருப்பதற்காக நவல்பட்டு மற்றும் பெல் பகுதியில் இருந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்தில் விரைந்து சென்றனர்.

மேலும் இந்த கெமிக்கல் டேங்கர் லாரியை தூக்கி நிறுத்துவதற்கு மூன்று கிரேன்கள் வரவழைக்கப்பட்டது. கவிழ்ந்த லாரியை மீட்கும் பணி தொடங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News