துவாக்குடி நகராட்சியில் ஒரே நாளில் 65 பேர் வேட்புமனு தாக்கல்
துவாக்குடி நகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு நேற்று ஒரே நாளில் 65 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. அதற்கான தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28-ந்தேதி தொடங்கி 4-ம் தேதி மாலையுடன் முடிவடைகிறது.
இந்த நிலையில் நேற்று திமுக 9, அதிமுக சார்பில் 30, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்று, அமமுக 9, தேமுதிக 1, பாஜக 3, சுயேட்சை 10 என மொத்தம் 65 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
ஏற்கனவே 25 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், இதுவரை வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.