திருச்சி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் மாணவி உள்பட 6 பேர் மாயம்

திருச்சி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் பள்ளி மாணவி உள்பட 6 பேர் திடீர் என மாயம் ஆனார்கள்.

Update: 2021-11-19 13:34 GMT

திருச்சி ஸ்ரீரங்கம் நரியன் தெருவை சேர்ந்த முருகன்-ஜெயலட்சுமி தம்பதிகளின் மகள் நந்தினி (வயது 15). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள பேக்கரி கடையில் பணியாற்றும் வடக்கு தேவி தெருவை சேர்ந்த அருண்குமார் (வயது 23) சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்ப வில்லை. இது குறித்து தனித்தனியாக வந்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

இதேபோல், குடும்பத்தகராறு காரணமாக திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபுரம், கோல்டன் நகரை சேர்ந்த அபுபக்கர் சித்திக் (வயது 43) என்பவர் அண்ணன் வீட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் மாயமானார். இது பற்றி அவருடைய மனைவி ரிஸ்வான்பேகம் கொடுத்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்

அதேபோல் மனநல பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வந்த திருச்சி தென்னூர் வெள்ளாளர் தெருவை சேர்ந்த சாமிநாதன் (வயது 45). சம்பவத்தன்று வீட்டில் இருந்து மாயமானார். இது குறித்து தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த திருச்சி காஜாபேட்டை பகுதியை சேர்ந்த தனது கணவர் ராமகிருஷ்ணனை (வயது 55) காணவில்லை என்று அவருடைய மனைவி மகாலட்சுமி (வயது 44) என்பவர் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சேலம் மாவட்டம், தாரமங்கலம் தாலுகா காட்டு வளைவு அருகே உள்ள ராஜ்கோட் பகுதியை சேர்ந்தவர் பாட்டப்பன். இவர் குடும்பத்துடன் ஊர் ஊராகச் சென்று கூலி வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அருகே உள்ள கரியமாணிக்கம் செல்லும் சாலையில் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்க சென்றனர். அடுத்த நாள் காலை எழுந்து பார்த்தபோது பாட்டப்பன் மகள் ஜெயலட்சுமி (வயது 16) பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இது குறித்த புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News