அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பலி
திருச்சி கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
திருவள்ளூர் மாவட்டம் கிரீன் லைன்ஸ் ரெட்டில்ஸ் கட்டபொம்மன் சாலையைச் சேர்ந்த ஜெயராமன் மகன் சதீஷ் (22). அதேபோல் சென்னை முத்தமிழ் நகரைச் சேர்ந்த 22 வயதான கிருஷ்ணன். இவர்கள் இருவரும் சென்னையில் இருந்து கொடைக்கானல் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.சதீஷ் என்பவர் வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். கிருஷ்ணராமன் பின்னால் உட்கார்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நம்பர் 1 டோல்கேட் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளிடம் பாலத்திற்கு முன் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் பின்னால் அமர்ந்திருந்த கிருஷ்ணன் மீது மற்றொரு அடையாளம் தெரியாத வாகனம் தலையில் ஏறி நிற்காமல் சென்றதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். வாகனத்தை ஓட்டிவந்த சதீஷ்க்கு கை,கால்களில் படுகாயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். விபத்து சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய வாகனத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.