ஸ்ரீரங்கம் முன்னாள் பெண் தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
திருச்சியில் ஸ்ரீரங்கம் முன்னாள் பெண் தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.;
திருவாரூர் மாவட்டத்தில் தனித்துணை ஆட்சியராக பணிபுரிந்து வருபவர் பவானி. இவர் ஸ்ரீரங்கம் தாசில்தார் ஆக ஏற்கனவே பணியாற்றி உள்ளார். பின்னர் பதவி உயர்வு பெற்று திருவாரூர் மாவட்டத்திற்கு மாறுதலாகி சென்றார்.. இவருக்கு திருவானைக்காவல் பகுதியில் வீடு உள்ளது.
இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவரது வீடு, வாளாடி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் மற்றும் மண்ணச்சநல்லூரில் உள்ள எஸ்.வி.ஆர். மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, டால்மியாபுரம் பகுதியில் உள்ள அலுமினிய தொழிற்சாலைகள் ஆகியவற்றில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.