கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்டவரை தாக்க முயன்றதாக போலீசில் புகார்
திருச்சி அருகே கிராமசபை கூட்டத்தில் கேள்வி கேட்டவரை தாக்க முயற்சித்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.;
திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் அல்லூரில் நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த கிராமசபை கூட்டத்திற்கு தலைவர் விஜயேந்திரன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பங்கேற்ற சிலர் குடிநீர் திட்டத்தில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறினர். இதற்கு பதில் அளிக்க மறுத்த தலைவர் விஜயேந்திரன் தன்னை தாக்க முயன்றதாக தாண்டவராயன் என்பவர் போலீசில் புகார் கொடுக்க சென்றார்.
இந்நிலையில் போலீஸ் நிலையம் சென்ற போது, அங்கும் வந்து தன்னையும் தன் சகோதரர் சத்திய குமார் மற்றும் பிரகாஷ் ஆகியோரையும் விஜயேந்திரன் மிரட்டியதாக தாண்டவராயன் ஜீயபுரம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.