திருச்சி வாசன் நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் குடியரசு தினவிழா
திருச்சி வாசன் நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் குடியரசு தினவிழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.;
திருச்சி வயலூர் சாலை வாசன் நகர் குடியிருப்போர் பொதுநல நலச் சங்கத்தின் சார்பாக 73வது குடியரசுதின விழா இன்று காலை காலை வாசன் நகர்7வது கிராஸ் விளையாட்டுமைதானத்தில் நடைபெற்றது.
நலச் சங்கத்தின் தலைவர் ஞா.அ.கலைச்செழியன் தலைமையில் நாச்சிகுறிச்சி ஊராட்சிமன்ற தலைவர் கோ.கிருஷ்ணவேணி தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்பித்தார்.
நாச்சிக்குறிச்சி ஊராட்சி மன்ற 7-வது வார்டு உறுப்பினர் செல்வராஜ்திலகம் பஞ்சாயத்து தலைவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அது சமயம் நகர் நலச்சங்க நிர்வாகிகளின் நகர் மக்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.