திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்றது.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஐந்தாறு மாதங்களே உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் குறிப்பாக ஆளும் கட்சியான தி.மு.க.வும்,எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் தேர்தலுக்கான வேலைகளை இப்போதே தொடங்கி விட்டனர். இரண்டு கட்சிகளும் நாற்பதுக்கு நாற்பது என்கிற தாரக மந்திரத்துடன் தேர்தல் பணியாற்றி வருகிறார்கள். இதற்காக வாக்குச்சாவடி அளவில் அதாவது பூத் கமிட்டி அமைத்து வேலை செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், ஒன்றிய, பகுதி, நகர, பேரூராட்சி மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று 26.10.2023 வியாழக்கிழமை காலை 10மணி அளவில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அந்தநல்லூர் தெற்கு ஒன்றியம் சிவகுரு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி தலைமை தாங்கினார். பூத் கமிட்டி மாவட்ட பொறுப்பாளர் தாடி ம.ராசு (கழக அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர்) சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கழக எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் பொன்.செல்வராஜ், ஒன்றிய செயலாளர்கள் கோப்பு நடராஜ் ஆமூர் ஜெயராமன் மற்றும் மகளிர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.