திருச்சி ஸ்ரீரங்கத்தில் மாணவர்களே காய்களாக மாறி நடந்த செஸ் போட்டி
திருச்சி ஸ்ரீரங்கத்தில் பள்ளி மாணவர்களே காய்களாக மாறிய செஸ் போட்டி நடந்தது.;
திருச்சி அருகே ஒரு பள்ளியில் மாணவர்களே காய்களாக மாறிய செஸ் போட்டி கலெக்டர் முன்னிலையில் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் ஸ்ரீரங்கம் தேவித் தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மேடையில் 16க்கு 16சதுர அடி அளவில் பிரமாண்ட சதுரங்க பலகை வரையப்பட்டு மாணவர்கள் காய்களாக மாறி விளையாடினர். இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் நேரில் பங்கு பெற்று சிறப்பாக விளையாடிய மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
திருச்சி மாவட்டக் கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மருதநாயகம். ஸ்டான்லி இராஜசேகர் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கு பெற்றனர்.மாவட்ட ஆட்சியரால் செஸ் ஒலிம்பியாட் லோகோ தம்பி வெளியிடப்பட்டது.
இதே போல் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதா நகராட்சி நடுநிலைப்பள்ளி, டாக்டர் ராஜன் நகராட்சி நடுநிலைப்பள்ளியிலும் சதுரங்க போட்டிகள் மாணவர்களை கொண்டு விளையாடிக் காட்டினர்.