திருச்சி ஸ்ரீரங்கத்தில் மக்களை தேடி மாநகராட்சி குறைதீர் முகாம் துவக்கம்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் மக்களை தேடி மாநகராட்சி குறைதீர்க்கும் முகாமினை அமைச்சர் நேரு துவக்கி வைத்தார்.

Update: 2022-07-27 10:13 GMT

திருச்சி ஸ்ரீரங்கத்தில் மக்களை தேடி மாநகராட்சி என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் நேரு பயனாளி ஒருவருக்கு ஆணை வழங்கினார்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  உத்தரவின்படி திருச்சி மாநகராட்சி தொடர்பான மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு காணும் வகையில் மக்களை தேடி மாநகராட்சி முகாம்   ஸ்ரீரங்கம் தேவி மஹாலில்    மாநகராட்சி மேயர்  மு.அன்பழகன்  தலைமையில் இன்று  நடைபெற்றது.

இம்முகாமில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு கலந்துகொண்டு பயனாளிகளுக்கு கட்டிட அனுமதி , சொத்து வரி பெயர் மாற்றம் ,சர்வே வரைபட நகல்  உள்ளிட்ட ஆணைகளை வழங்கினார்.

இதில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர்  எம்.பழனியாண்டி, துறையூர் சட்டமன்ற உறுப்பினர் செ. ஸ்டாலின் குமார்,  முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன்,    நகரப் பொறியாளர் (பொறுப்பு)பி. சிவபாதம் செயற்பொறியாளர்கள் ஜி .குமரேசன் , கே.பாலசுப்பிரமணியன், ஸ்ரீரங்கம் மண்டல குழு தலைவர் ஆண்டாள் ராம்குமார்,ஸ்ரீரங்கம் உதவி   ஆணையர் ரவி, மற்றும்    மத்திய மாவட்ட தி.மு.க.பொறுப்பாளர்  க. வைரமணி,  மாமன்ற உறுப்பினர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News