திருச்சி முக்கொம்பு வந்தடைந்த காவிரி நீர் - மலர் தூவி வரவேற்ற விவசாயிகள்

திருச்சி முக்கொம்புவுக்கு காவிரி நீர் வந்தடைந்தது. விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்.

Update: 2021-06-15 04:49 GMT

திருச்சி  கம்பரசம்பேட்டை தடுப்பணையில்  வழிந்தோடும் காவிரி நீர்.

உழவில்லையேல் உணவில்லை என்பார்கள். டெல்டா மாவட்ட விவசாயிகளுக்காக வருடாவருடம் மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறப்பது வழக்கம்.

அந்த வகையில் தற்போது டெல்டா மாவட்டங்களான திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர்,திருவாரூர், தஞ்சாவூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகளுக்காக கடந்த மே 12 ம் தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார்.

மேட்டூர் அணையில் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தண்ணீரானது இன்று காலை முக்கொம்பு வந்தடைந்தது. முக்கொம்பு அணையில் உள்ள 47 மதகுகள் வழியாக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இதையடுத்து விவசாயிகள் மலர்கள் மற்றும் நெல்மணிகளை தூவி மேட்டூரில் இருந்து வந்த தண்ணீரை வரவேற்றனர். முக்கொம்பில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் தற்போது கம்பரசம்பேட்டை தடுப்பணையில் வந்து அழகாய் வழிந்தோடி செல்கிறது.

Tags:    

Similar News