வீட்டில் ஆள் இல்லாத போது உள்ளே சென்று 5 சவரன் நகை, செல்போன் திருட்டு

திருவானைக்காவலில் வீட்டில் ஆள் இல்லாத போது உள்ளே சென்று 5 சவரன் நகை, செல்போனை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2021-10-27 02:30 GMT
பைல் படம்

திருச்சி திருவானைக்காவல் கந்தன் நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 51). இவர் வீட்டில் யாரும் இல்லாத போது பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் வீட்டில் இருந்த 5 சவரன் தங்க நகை மற்றும் செல்போனை திருடி சென்று விட்டனர்.

இது குறித்து ராமகிருஷ்ணன் ஸ்ரீரங்கம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இந்திராகாந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News