திருச்சி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாணவ மாணவிகள் ரத்ததானம்

திருச்சி அருகே குழுமணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடத்தப்பட்ட முகாமில் கல்லூரி மாணவ மாணவிகள் ரத்ததானம் செய்தனர்.;

Update: 2022-01-02 03:00 GMT

திருச்சி அருகே நடந்த ரத்ததான முகாமில் மாணவ மாணவிகள் ரத்த தானம் செய்தனர்.

திருச்சி அருகே உள்ள குழுமணி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பேரூரில் உள்ள ஒரு கல்லூரி விடுதி மாணவர்கள் இணைந்து, நடத்திய ரத்ததான முகாம் கல்லூரி விடுதி வளாகத்தில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு குழுமணி மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை வட்டார தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் விக்னேஷ் தலைமை தாங்கினார்.

குழுமணி அரசு மருத்துவமனை டாக்டர் சுகந்தி முன்னிலை வகித்தார். இந்த முகாமில் குழுமணி அரசு மருத்துவமனை பணியாளர்கள், கல்லூரி விடுதி மாணவர்கள் உள்ளிட்ட 30-பேர் ரத்த தானம் செய்தனர்.

இதில் ரத்ததானம் செய்த அனைவருக்கும் சான்றிதழ்களை டாக்டர் சுகந்தி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜமாணிக்கம், சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி மற்றும் மஸ்தூர் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News