ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று இராப்பத்து இரண்டாம் நாள் நிகழ்ச்சி

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுந்த ஏகாதசி விழாவில் இன்று இராப்பத்து இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் நடக்கிறது.

Update: 2021-12-15 04:05 GMT
சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீநம்பெருமாள்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில்  இன்று இராப்பத்து இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் நடக்கிறது. பகல் 12 மணிக்கு ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடு மதியம் 1 மணிக்கு பரம்பத வாசல் வழியாக ஆஸ்தான மண்டபம் சென்றடைகிறார்.

மதியம் 1.30 மணி முதல் 2.30 மணி வரை அலங்காரம் செய்ய அமுது திரை. மாலை 2.30 மணி முதல் இரவு 7 மணி வரை அரையர் சேவையுடன் பொது ஜன சேவை நடைபெறும்.இரவு 7.00 மணி முதல் இரவு 7.30 மணி வரைதிருப்பாவாடைகோஷ்டி. இரவு 7.30 மணி முதல் இரவு 8 மணி வரை வெள்ளி சம்பா அமுது செய்ய திரை.

இரவு 9.30 மணிக்கு ஸ்ரீநம்பெருமாள் திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு வீணை ஏகாந்தத்துடன்  மூலஸ்தானம் சேருதல் நடைபெறுகிறது. இன்று மூலஸ்தான தரிசன விபரம்,(முத்தங்கி சேவை)காலை 5.30 மணி முதல், காலை 9 மணி வரை. பின்னர், பகல் 1 மணி முதல்இரவு 7.30 மணி வரை தரிசனம் செய்யலாம்.(சொர்க்கவாசல்) பரமபத வாசல்பகல் 1 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.இந்த தகவல் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News