ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ரங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ரங்கநாச்சியார் நவராத்திரி உற்சவத்தின் ஐந்தாம் நிகழ்ச்சி இன்று நடந்தது.;

Update: 2021-10-10 16:00 GMT

சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் ரங்கநாச்சியார்

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் கடந்த ஆறாம் தேதி  தொடங்கி  நடைபெற்று வருகிறது.

இந்த உற்சவத்தின் 5-ஆம் நாளான இன்று உற்சவர் ரெங்கநாச்சியார் ரத்தின கிரீடம், வைரத்தோடு, வைர அபயஹஸ்தம், பவள மாலை, அடுக்கு பதக்கம், முத்துச்சரம் உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் கொலு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

Tags:    

Similar News