ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ரூ.100 கட்டண முறை அமலுக்கு வந்தது

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ரூ.100 கட்டண முறை இன்று முதல் அமலுக்கு வந்தது.;

Update: 2022-03-01 14:19 GMT

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ரூ.100 கட்டண சீட்டுமுறை பற்றி இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் விரைவு தரிசனம் செய்வதற்கு ரூ.250கட்டணமும், சிறப்பு தரிசனத்திற்கு ரூ.50 கட்டணமும் வசூலிக்கப்பட்டு வந்தது. 

இந்த இரு கட்டண சீட்டுமுறை ரத்து செய்யப்பட்டு ரூ.100 கட்டண  சீட்டு முறை மார்ச் 1ம் தேரி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பின்படி இந்த புதிய முறை இன்று முதல் அமலுக்கு வந்தது.சென்னை ஐகோர்ட்டு வழிகாட்டுதல் படி இந்த புதிய கட்டண முறை அமலுக்கு வந்துள்ளது.

பக்தர்கள் தரிசனம் முடிந்து உடனே வெளியே செல்ல விரும்பினால் தொண்டைமான் மேடு வாசல் வழியாகவும், இரண்டாம் பிரகாரம் வலம் வர விரும்புபவர்கள் கிளி மண்டபத்தில் ஏறி கோவில் விமானத்தையும், சேர குல வல்லி தாயாரையும், பீ பீ நாச்சியாரையும் வழிபாடு செய்து பரவாசுதேவர் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணரையும் தரிசனம் செய்து நாழிகேட்டான் வாசல் வழியாக வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News