ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான ரூ.80 லட்சம் மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.;
ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான 70 சென்ட் இடம் திருவானைக்காவல் -சென்னை டிரங் ரோட்டில் உள்ளது. அதில் 6 சென்ட் இடத்தை தனியார் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு இரவோடு இரவாக ஆக்கிரமிப்பு செய்து வேலி அமைத்து இருந்தார் .
இதை அறிந்த கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து உடனடியாக கோயில் பணியாளர்களுடன் சென்று பொக்லைன் உதவியுடன் அந்த இடத்தை இன்று மதியம் 04.03.2022 மீட்டு நடவடிக்கை எடுத்துள்ளார். அந்த இடத்தின் மதிப்பு ஒரு கோடியே 80 லட்ச ரூபாய் ஆகும் .