ஸ்ரீரங்கத்தில் இன்று இராப்பத்து உற்சவத்தின் 9-ம் நாள் நிகழ்ச்சி

ஸ்ரீரங்கத்தில் இன்று இராப்பத்து உற்சவத்தின் 9-ம் நாளில் பனிக்குல்லா ஆபரணத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார்.;

Update: 2021-12-22 15:50 GMT
ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி விழா இராப்பத்து உற்சவத்தின் 9 ம்நாளில் இன்று நம்பெருமாள் எழுந்தருளினார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின், இராப்பத்து உற்சவத்தின் 9ம் திருநாளான இன்று நம்பெருமாள், பனிக்குல்லாவில் ஒரு புஜகீர்த்தியுடன், மகர கர்ண பத்திரம், வைர அபயஹஸ்தம், பங்குனி உத்திர பதக்கம், பெரிய பிராட்டி பதக்கம், ரங்கூன் அட்டிகை, பவளமாலை, நெல்லிக்காய் மாலை, காசு மாலை, 8 வட முத்து சரம், அடுக்கு பதக்கங்கள், ஹஸ்தத்தில் சுட்டிப்பூ தொங்கல் உள்ளிட்ட திருவாபரணங்களுடன் சிறப்பு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

Tags:    

Similar News