திருச்சி ஸ்ரீரங்கத்தில் 37 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு பிரதிஷ்டை

திருச்சி ஸ்ரீரங்கத்தில் 37 அடி உயர அனுமன் சிலை இன்று காலை நிலை நிறுத்தப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

Update: 2021-10-24 06:30 GMT

திருச்சி ஸ்ரீரங்கத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட  37   அடி உயர ஆஞ்சநேயர் சிலை.

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில் காவிரிக்கும் கொள்ளிடத்திற்கும்  நடு பகுதியில் மேலூர் ரோட்டில் அமைந்துள்ள அனுமன் தோப்பில் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் சிலை முப்பத்தி ஏழு அடியில் வடிவமைக்கப்பட்டு இன்று காலை 10 மணிக்கு மேல் பதினோரு மணிக்குள் எந்திர பிரதிஷ்டை செய்து அனுமன் சிலையை எழுந்தருள செய்தனர்.

இதற்காக ராட்சத கிரேன் கொண்டு வந்து அதன் உதவியுடன் 37 அடி உயர கொண்ட கருங்கல்லால் ஆன ஆஞ்சநேயர் சிலையை அதன் பீடத்தில் நிலை நிறுத்தினர். அப்போது வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் ஓத, மங்கள இசை முழங்க பக்தர்கள் அனைவரும் ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் அனுமான் என்ற கோஷங்களை வேகமாக முழங்கி பரவசப்படுத்தினர்.

இதை தொடர்ந்து இந்த கோயிலில் வரும் ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்து வருவதாக இந்த கோயில் அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Similar News