திருச்சி அருகே பிறந்து 2 நாட்களே ஆன ஆண் குழந்தை சாலையோரம் வீச்சு
திருச்சி அருகே பிறந்து 2 நாட்களே ஆன ஆண் குழந்தை சாலையோரம் அனாதையாக வீசப்பட்டது.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், பெருகமணி அருகே உள்ள ராமகிருஷ்ணா குடில் சாலை ஒரத்தில் நேற்று இரவு பிறந்த ஆண் குழந்தையை யாரோ மர்ம நபர் விட்டு சென்றுள்ளனர். அப்போது பச்சிளம் குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்ட குடில் நிர்வாகத்தினர் பெட்டவாய்த்தலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த ரோந்து பணியில் இருந்த போலீசார் சாலையிலிருந்த அழகான பிறந்து 2 நாட்களான ஆண் குழந்தையை மீட்டனர். பின்னர் சைல்டு லைனுக்கு தகவல் கொடுத்து குழந்தையை பத்திரமாக 108 ஆம்புலன்சில் திருச்சி அரசு மருத்துவமனைைக்கு கொண்டு சென்றனர். பின்னர் இது குறித்து ஜீயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.