திருச்சி மாவட்டத்தில் கூடுதல் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க கோரிக்கை
திருச்சி மாவட்டத்தில் கூடுதலாக நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாய சங்க சங்கங்களின் சார்பில் கோரிக்கை.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருச்சி மாவட்ட செயலாளர் அயிலை சிவசூாியன் கூறியதாவது:
2021−2022 ஆம் ஆண்டுக்கான சம்பா அறுவடை பணிகள் துவங்கி முழு வீச்சில் நடைபெற்று கொன்டு இருக்கிறது. திருச்சி மாவட்டத்தில் 34−இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்க முடிவு எடுக்கப்பட்டு படி, படியாக திறக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு காவிாி பாசன பகுதிகளுக்கு மேட்டூா் அணையில் இருந்து ஜூன் 12−ல் தண்ணீா் திறக்கப்பட்டு தொடா்சியாக பாசனத்திற்க்கான தண்ணீா் விடப்பட்டதாலும், மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து அவ்வப்போது தொடா் மழை பெய்து வந்ததாலும் வழக்கத்தை விட கூடுதலான ஏக்கா் நிலங்களில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு அறுவடை பணிகள் நடைப்பெற்று வருகிறது. எனவே விவசாயிகள் நலன் கருதி கூடுதலான இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் மண்ணச்சநல்லூா் வட்டம் முழுமையாக விடுபட்டுவுள்ளது. மண்ணச்சநல்லூா் வட்டத்தில் கடந்த காலங்களில் செயல்பட்டு வந்த இடங்களான கிளியநல்லூா் மற்றும் மாதவபெருமாள் கோவில் பகுதிகளில் கொள்முதல் நிலையங்கள் திறப்பதோடு ஶ்ரீரங்கம் வட்டத்தில் அந்தநல்லூா் ஒன்றியத்தில் திருப்பராய்துறை அல்லது திருச்செந்துறை, முத்தரசநல்லூா் அல்லது பழூா், மணிகண்டம் ஒன்றியத்தில் அதவத்தூா் அல்லது அல்லிதுறை, தொட்டியம் வட்டத்தில் சீனிவாசநல்லூா் பகுதிகளில் நெல்கொள்முதல் நிலையங்களை திறப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு நெல் கொண்டு வரும் விவசாயிகளை ஆன்லைனில் பதிவு செய்து கொன்டு வர கட்டாயபடுத்த கூடாது . கடந்த காலங்களில் சிப்பம் 1−க்கு ஏற்று கூலி, இறக்குகூலி ரூ3.25−வழங்கப்பட்டதால் கட்டுபடியாக வில்லை என விவசாயிகளிடம் சிப்பம் 1−க்கு ரூ 40−வரை வசூல் செய்யப்பட்டது.
இந்தாண்டு தமிழக முதல்வா் ஏற்றுகூலி, இறக்குகூலியாக சிப்பம் 1−க்கு ரூ.10−ஆகவும், பணிபுாியும் ஊழியா்களுக்கு சம்பள உயா்வும் வழங்கி அறிவிப்பு செய்துள்ளாா்கள். எனவே எக்காரணம் கொண்டும் விவசாயிகளிடம் பணம் வசூல் செய்வதை அனுமதிக்கமால் வசூல் செய்யும் ஊழியா்கள் மீது மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேன்டும்மென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், திருச்சி மாவட்ட செயலாளர் அயிலை சிவசூாியன் கூறியுள்ளார்.