இனாம்குளத்தூரில் மழையில் அதிமுக நிர்வாகி வீடு சேதம்: பரஞ்சோதி ஆய்வு
திருச்சி அருகே இனாம் குளத்தூரில் மழையில் அதிமுக நிர்வாகி வீடு சேதமடைந்தது; அதனை, முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, பார்வையிட்டார்.;
திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, மணிகண்டம் தெற்கு ஒன்றியத்தில் உள்ள இனாம் குளத்தூர் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால், பல இடங்களில் மழை நீர் சூழ்ந்து, பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இந்த மழையால், சின்ன ஆலம்பட்டி கிளை அதிமுக செயலாளர் செல்வத்தின் வீடு மீது இடி தாக்கியது. இதில், செல்வம், அவரது குடும்பத்தினர் பலத்த காயமடைந்தனர். அவர்கள், திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனை அறிந்த திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அண்ணன் மு.பரஞ்சோதி, செல்வம் வீட்டிற்கு நேரில் சென்று பார்வையிட்டார். சிகிச்சை பெற்று வரும் செல்வம், அவரது குடும்பத்தாரையும் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் நேரில் சென்று ஆறுதல் கூறினார். அவருடன், முத்துகருப்பன், ஒன்றிய அதிமுக செயலாளர் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் ஜெயகுமார், மணிகண்டம் வடக்கு ஒன்றிய செயலாளர், மாவட்ட கழகபொருளாளர் சேவியர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.