ஸ்ரீரங்கத்தில் மது அருந்த எதிர்ப்பு தெரிவித்தவர் மண்டை உடைப்பு மர்ம நபர்கள் அட்டூழியம்

ஸ்ரீரங்கம் யாத்ரிகர் நிவாஸ் அருகே மது அருந்தி கொண்டிருந்தவர்களை கண்டித்த நபரின் மண்டையை உடைத்து, மர்ம நபர்கள் அட்டூழியம் செய்துள்ளனர்.

Update: 2021-04-22 09:30 GMT

திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிட கரையில் யாத்ரி நிவாஸ் எதிர்புறம் பகுதியில் 3 வாலிபர்கள் மதுபானம் அருந்தி உள்ளனர். அந்த இடத்தின் உரிமையாளர் வடமலை (45) மது அருந்த கூடாது என எச்சரித்துள்ளார்.

அப்போது 3 வாலிபர்கள் வடமலையை கடுமையாக தாக்கி, அடித்து மண்டையை உடைத்து உள்ளனர். இதில் படுகாயமடைந்த அவரை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதல் நடத்திய 3 பேர் தப்பி ஓடி விட்டனர். இதுப்பற்றி தகவலறிந்து வந்த ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News