திருச்சியில் அமைச்சர் நேருவிடம் ஸ்ரீரங்கம் கோயில் பட்டர்கள் கோரிக்கை மனு
ஸ்ரீரங்கம் கோவில், உப கோயில் அர்ச்சகர்கள் பட்டர்கள் அமைச்சர் கே.என்.நேருவிடம் பணி தொடர்பாக கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேருவை இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மற்றும் அதன் உபகோயில்களில் பணியாற்றும் பட்டர்கள், அர்ச்சகர்கள் மனு கொடுத்தனர்.
கோயில் பணிகள் தொடர்பாகவும், தங்களுக்கு அரசு நிவர்த்தி செய்யப்படவேண்டிய குறைகள் தொடர்பான கோரிக்கைகள் அதில் இடம் பெற்று இருந்தன.
ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயர் அன்பழகன், திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வைரமணி மற்றும் தி.மு.க. முன்னணி பிரமுகர்கள் அப்போது உடன் இருந்தனர்.