பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு: தே.மு.தி.க. நிர்வாகி மீது தாக்குதல்

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு: தே.மு.தி.க. நிர்வாகி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Update: 2022-01-21 03:45 GMT

ஸ்ரீரங்கம் காவல் நிலையம் 

திருச்சி, ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த வர் சீனிவாசன் (வயது 48). இவருடைய தம்பி வைத்திய நாதன் (46). இவர் தே.மு.தி.க. திருச்சி தெற்கு மாவட்ட பொருளாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த சத்யநாராயணன் என்பவருக்கும் கோவிலில் பிரசாத ஸ்டால் நடத்துவது தொடர்பாக பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று இரவு திருவானைக்காவல் மெயின் ரோட்டில் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கிக்கொண்தாக கூறப்படுகிறது. இதில் வைத்தியநாதன், சீனிவாசன், மற்றொரு தரப்பில் கிரி, பிரசாத் ஆகியோர் காயமடைந்து சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

இதையடுத்து இருதரப்பினரும் கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று இரவு பரபரப்பு ஏற்பட் டது.

Tags:    

Similar News