திருச்சி வயலூர் முருகன் கோவிலில் அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு
திருச்சி வயலூர் முருகன் கோவிலில் அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.;
வயலூர் முருகன் கோவிலில் இன்று அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு நடத்தினார்.
திருச்சி மாவட்டம் குமாரவயலூரில் உள்ளது வயலூர் முருகன் கோவில் என்றழைக்கப்படும் சுப்பிரமணியசுவாமி கோவில். இங்கு தமிழக அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது கோவில் சார்பில் வழங்கப்படும் அன்னதானத்திற்காக தயாரிக்கப்படும் உணவுகள் தரமானதாக உள்ளதா? என்றும் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலைய துறை ஆணையர் குமரகுருபரன், இணை ஆணையர் செல்வராஜ், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மற்றும் அதிகாரிகள், கட்சி பிரமுகர்கள் சென்று இருந்தனர்.