ஸ்ரீரங்கத்தில் பஸ் நிலையம் அமைய உள்ள இடத்தில் அமைச்சர் நேரு ஆய்வு
ஸ்ரீரங்கத்தில் பஸ் நிலையம் அமைய உள்ள இடத்தில் அமைச்சர் நேரு ஆய்வு செய்தார்.;
திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை அருகில் நகர்ப்புற பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த இடத்தை இன்று தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கேஎன்நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், ஆணையர் வைத்திநாதன், நகர பொறியாளர் சிவபாதம் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.