திருச்சி ஸ்ரீரங்கத்தில் பஸ் நிலையம் அமைய இடத்தில் அமைச்சர் நேரு ஆய்வு
திருச்சி ஸ்ரீரங்கத்தில் பஸ் நிலையம் அமைய இடத்தில் அமைச்சர் கே என்.நேரு இன்று ஆய்வு செய்தார்.;
திருச்சி ஸ்ரீரங்கத்தில் பஸ் நிலையம் அமைய உள்ள இடத்தில் அமைச்சர் நேரு ஆய்வு செய்தார்.
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு இந்திய அளவில் மட்டும் இன்றி வெளிநாடுகளில் இருந்தும் நாள் தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அந்த வகையில் ஸ்ரீரங்கம் ஒரு ஆன்மிக தலமாக மட்டும் இன்றி சுற்றுலா தளமாகவும் விளங்கி வருகிறது. ஆனால் இங்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இதுவரை ஒரு பஸ் நிலையம் கூட அமைக்கப்படவில்லை. பஸ் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்பது ஸ்ரீரங்கம் மக்களின் கோரிக்கை ஆகும்.
இந்த கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைத்தல் தொடர்பாக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை அமைந்துள்ள பகுதியில் இன்று நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்,மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, மண்டலத் தலைவர் ஆண்டாள் ராம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.